தமிழகத்தில் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

0 3658
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பாடத் திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பாடத் திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் குருமந்தூர், நம்பியூர் பகுதியில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தும், சத்துணவு கூடங்களுக்கு உபகரணங்களையும் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்தபிறகே, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து போட்டித் தேர்வுகளையும் மாணாக்கர்கள் எதிர்கொள்ளும் வகையிலேயே பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments