கடலில் நீந்தி இத்தாலிக்கு சென்றடையும் முயற்சியாக கப்பலில் இருந்து கடலில் குதித்த புலம்பெயர்ந்தோர்
இத்தாலி அருகே மீட்புக் கப்பல்களில் இருந்து 2வது நாளாக 40க்கும் மேற்பட்டோர் கடலில் குதித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பியாவுக்கு வரும் புலம்பெயர்ந்தோரை மீட்கும் பணியில் ஸ்பெயின் நாட்டின் தொண்டு நிறுவன கப்பல் ஓபன் ஆர்ம்ஸ் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த 6 முதல் 10ம் தேதி வரை 270க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
அவர்களை எங்கே தங்க வைப்பது என்பது தொடர்பான அரசின் வழிமுறைகளுக்காக மீட்புக் குழுவினர் காத்திருக்கும் நிலையில், கடலில் நீந்தி இத்தாலிக்கு செல்லும் முயற்சியாக நேற்று கப்பலில் இருந்து குதித்த 70க்கும் மேற்பட்டோர் குதித்தனர்.
அவர்கள் இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் போலீஸ் கப்பல்களால் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 48 பேர் கடலில் குதித்தனர்.
Comments