தடையை மீறி கூட்டம் கூடும் வகையில் செயல்பட்டதாக நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு

0 1849

தடையை மீறி கூட்டம் கூடும் வகையில் செயல்பட்டதாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், பூங்கா, சுற்றுலாத்தலங்களை திறப்பதற்கான தடை நீடிக்கிறது. அதிலாபாத் அருகிலுள்ள வனப்பகுதியில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த அல்லு அர்ஜுன், சனிக்கிழமை அருகிலுள்ள குண்டலா அருவிக்கு தடையை மீறி நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அவரை பார்ப்பதற்காக தனிநபர் இடைவெளியின்றி கூட்டம் கூடிய நிலையில், செல்பி எடுக்கவும் முண்டியடித்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதோடு விமர்சனங்களும் எழுந்தன.

இதையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புகாரளித்ததன் பேரில், அல்லுஅர்ஜுன் மற்றும் புஷ்பா படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தடையை மீறி அருவி பகுதிக்கு சென்றதற்கு விளக்கமும் கேட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments