கூகுள் பிளேஸ்டோரில் இருந்து Paytm நீக்கம்..!
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பே.டி.எம். ஆப் நீக்கப்பட்டுள்ளது. தங்கள் கொள்கைகளுக்கு எதிராக, விதிமீறலில் ஈடுபட்டதால், பேடிஎம் செயலி நீக்கப்பட்டிருப்பதாக, கூகுள் தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டு அறிமுகம் ஆன பேடிஎம் செல்போன் செயலி, மாதந்தோறும், சுமார் 5 கோடி பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து, பேடிஎம் செயலியை நீக்கி, கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
விதிமீறலில் ஈடுபடும் ஆன்லைன் சூதாட்டங்கள், விளையாட்டுகளை, பேடிஎம் ஊக்குவிக்கப்பதாகவும், கூகுள் பிளே ஸ்டோர் கொள்கை முடிவுகளுக்கு இது எதிரானது என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தங்களது செயலி நீக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக இருக்கும் என்றும், அச்சப்பட வேண்டாம் என்றும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, டவுன்லோடு செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ள பேடிஎம் செயலியை பயன்படுத்தலாம் என்றும், ஆனால், அதனை அப்டேட் செய்யவோ, புதிதாக பதிவிறக்கம் செய்யவோ முடியாது என்றும், பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது.
Paytm removed from Google Playstore for 'unregulated gambling'#Paytm https://t.co/4jAMJO4pG1 pic.twitter.com/32hXXQ43t5
— Business Standard (@bsindia) September 18, 2020
Comments