கோயம்பேடு உணவு தானியச்சந்தை 4 மாதங்களுக்கு பிறகு இன்று திறப்பு

0 1227
கோயம்பேடு உணவு தானியச்சந்தை 4 மாதங்களுக்கு பிறகு இன்று திறப்பு

சென்னை கோயம்பேடு உணவு தானியச்சந்தை 4 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.

உணவு தானியச் சந்தையில் 290 கடைகள் திறந்த நிலையில், சரக்குகளை எடுத்து வரும் மற்றும் சரக்குகளை வாங்கிச் செல்லும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, ஓட்டுநர், உதவியாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெயர் விவரமும் பதிவு செய்யப்பட்டது.

கடைகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், சானிட்டைஷர் பயன்படுத்த ஏற்பாடு ஆகியவை, சிசிடிவி காமிராக்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கடுமையான முறையில் வியாபாரிகளிடம் கடன் வசூலில் ஈடுபடும் தனியார் வங்கிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்துமாறு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments