இந்தியா - ரஷ்யா உறவை மேலும் வலுப்படுத்த மோடி, புதின் மீண்டும் உறுதி
இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் மீண்டும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாளையொட்டி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதின் வாழ்த்து தெரிவித்ததாகவும், அப்போது சிறப்பு மற்றும் முக்கியத்துவமிக்க அரசுமுறை உறவை மேலும் வலுப்படுத்த இருவரும் மீண்டும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் புதின் தனிப்பட்ட உறுதி கொண்டிருப்பதற்கு மோடி நன்றி தெரிவித்து கொண்டார் என்றும், இந்தியாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டுக்கு புதினின் வருகையை எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் கூறினார் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments