அரசு பணியாளர்களின் பொது இடமாறுதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு - நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர் சுற்றறிக்கை

0 840
அரசு பணியாளர்களின் பொது இடமாறுதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு - நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர் சுற்றறிக்கை

அரசு பணியாளர்களின் பொது இடமாறுதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அரசுப் பணியாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொது இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். கொரோனா சூழலில் செலவினங்களைக் குறைக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அரசு பணியாளர்களின் பொது இடமாறுதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை சார்பில் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இடமாறுதல் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இட மாறுதல் வழங்கலாம் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments