'உனக்கா பெண் இல்லை என் மகளை கட்டிக் கொள்'! - 13 வயது சிறுமியை 28 வயதான சகோதரருக்கு கட்டிக் கொடுத்த பெண்

0 144392

திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடி கிடப்பதால் தற்பேது வீட்டில் இருந்து வந்தார். இவரது தாய் மாமன் அருள்பாண்டி (வயது 28) தேனி மாவட்டம் தென்றல் நகரில் வசித்து வந்தார். அருள்பாண்டிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே அருள்பாண்டிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் காதல் இருந்துள்ளது. அருள்பாண்டியனை திருமணம் செய்யத மறுத்து தன் காதலருடன் ஓடி விட்டார்.

இந்தத் தகவலை அருள்பாண்டி தன் உடன்பிறந்த சகோதரி மகேஷ்வரியை தொடர்புக்கொண்டு கூறியிருக்கிறார். உடனே மகேஷ்வரி, 'உனக்காடா பெண் இல்லை... என் மகளைக் கட்டிக் கொள் ' என்று கூறி உடனடியாக திருமணத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளார். தேனியில் தென்றல் நகரில் 28 வயது இளைஞர் அருள்பாண்டியனுக்கும் 13 வயது சிறுமிக்கும் பலர் அறிய திருமணம் நடந்தது. திருமணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவோ போலீஸ் , அரசு அதிகாரிகள், குழந்தைகள் நல அமைப்பு முன் வரவில்லை.

சிறுமியின் நிலை குறித்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புக்கொண்டு புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments