கண்டிப்பான தலைமை ஆசிரியர்... பழிவாங்க துடித்த ஆசிரியைகள்!- கிளைமாக்ஸில் சிக்கிய ஞானாம்பிகைகள்!
வேடசந்தூர் அருகே தலைமை ஆசிரியருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக கட்டணம் வசூல் செய்வதாகக் கூறி உடன் பணி புரியும் சக ஆசிரியைகளே போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியராக தங்கவேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார் இதே பள்ளியில் ஞானாம்பாள் மற்றும் ஞானாம்பிகை என்ற இரு ஆசிரியைகள் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுககு முன்பு தான் தலைமை ஆசிரியராக தங்கவேல் பொறுப்பேற்றார்.
மாணவர்களின் நலனுக்காகவும் பள்ளியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்திலும் தங்கவேலு பல நடவடிககைகளை எடுத்து வருகிறார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த பள்ளியில் வசதிகளை ஏற்படுத்தி வந்தார். பணியில் ஓப்பி அடித்த ஆசிரியர்கள்,ஆசிரியைகளை கண்டித்துள்ளார். தலைமை ஆசியரின் கண்டிப்பு ஞானாம்பாள், ஞானாம்பிகை என்ற இரு ஆசியைகளுக்கு பிடிக்கவில்லை.
எனவே, தங்கவேலுவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திட்டமிட்டனர். அதன்படி, தலைமை ஆசிரியரை பழிவாங்கும் நோக்கத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு 6 -ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை 260 ரூபாயும் 9 -ம் மற்றும் 10 - ம் வகுப்புகளுக்கு 310 ரூபாயும் 11-ம் மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கு 600 ரூபாயும் வசூலிப்பதாக கூறி நேற்று எரியோடு பகுதி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்ட ஏற்பாடு செய்துள்ளனர்.
மாணவர்கள் பெற்றோர்கள் நல கூட்டமைப்பு என்ற பெயரில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டது . போஸ்டர்களை பார்த்த மாணவர்கள் பெற்றோர்கள் நல கூட்டமைப்பு சங்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தங்கள் அமைப்பு சார்பாக எந்த போஸ்டரும் ஒட்டவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, எரியோடு காவல் நிலையத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் நல கூட்டமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டது. அதில், ஙங எங்கள் சங்கத்தின் பெயரை களங்கப்படுத்தி இது போன்ற போஸ்டர் ஒட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.மேலும் போஸ்டர் அச்சடித்த அச்சகம் மீதும் இதற்கு காரணமாக ஞானாம்பாள் மற்றும் ஞானாம்பிகை ஆகிய ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments