மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் உள்ளிட்ட மேலும் 2 எம்பிக்களுக்கு கொரோனா

0 960
மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் உள்ளிட்ட மேலும் 2 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல், பாஜக மாநிலங்களவை எம்பி வினய் சஹஸ்ராபுத்தே (Vinay Sahasrabuddhe) ஆகிய மேலும் 2 எம்பிக்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே 29 எம்பிக்களுக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதியானது. தற்போது பாதிக்கப்பட்ட 2 பேரையும் சேர்த்தால், கொரோனா பாதித்த எம்பிக்கள் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு வரும் எம்பிக்கள், அவருடைய உதவியாளர்கள், அதிகாரிகள், பாதுகாவலர்கள், செய்தியாளர்களுக்கு பரிசோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments