ரயிலில் மாணவியை ஆபாசமாக படம் எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது

0 11224

அரக்கோணம் அருகே ஒடும் ரயிலில் கழிவறைக்கு சென்ற கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுக்க முயன்ற டிக்கட் பரிசோதகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் ஒருவர் கோவையில் உள்ள கல்லூரியில் முதுகலைப் பட்டபடிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கோவையிலிருந்து சேரன் அதிவிரைவு ரயிலில் சென்னை வந்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தை வந்த போது மாணவி கழிவறைக்கு சென்றார்.

அப்போது கழிவறையின் வெளியே நின்ற டிக்கெட் பரிசோதகர் மாணவியை செல்போனில் ஆபாச படம் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை கவனித்த மாணவி அலறி கூச்சலிட்டடார். சக பயணிகள் எழுந்து மாணவியிடம் விசாரித்தனர். தொடர்ந்து டிக்கெட் பரிசோதகரின் செல்போனை பறித்து சக பயணிகள் பார்த்த போது மாணவியை படம் பிடிக்க முயன்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக மாணவி ரயில்வே ஹெல்ப் லைனில் புகார் தெரிவித்தார். ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் அங்கே தயாராக இருந்த ரயில்வே போலீசார் டிக்கெட் பரிசோதகரை கைது செய்தனர். சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த அவரின் பெயர் மேகநாதன் என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் அரக்கோணம் பெரம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நடந்ததால் அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் மேகநாதன் அடைக்கப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments