மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா...

0 4029
மத்திய பெண் அமைச்சர் ராஜினாமா.!

வேளாண் உற்பத்தி தொடர்பான 3 விவசாய மசோதாக்களை கண்டித்து, சிரோன்மணி அகாலி தளத்தைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ராஜினாமா செய்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மசோதாக்களை, ஆரம்ப நிலையில் இருந்தே, சிரோன்மணி அகாலி தளம் எதிர்த்து வருகிறது. இந்நிலையில், மக்களவையில் பேசிய சிரோன்மணி அகாலி தள தலைவரும், எம்.பி.யுமான சுக்பீர் சிங் பாதல்,(Sukhbir Badal) தனது மனைவியும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் (Harsimrat Kaur Badal) பதவி விலகுவார் என அறிவித்தார்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments