கர்நாடகா பாஜக எம்.பி கொரோனாவால் பலியா?- மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு

0 1709
கர்நாடகா பாஜக எம்.பி கொரோனாவால் பலியா?- மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு

கர்நாடக எம்.பி மரணமடைந்துவிட்டதாக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவிக்க, அதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்திருப்பதால், பெருங்குழப்பம் நிலவுகிறது.

கடந்த 2ஆம் தேதி பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, பாஜக எம்.பி அசோக் கஸ்டி, பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, உறுப்புகள் செயலிழந்த நிலையில், பிற்பகலில், எம்.பி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, குடியரசு தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், மக்களவை சபாநாயகர் உள்ளிட்ட தலைவர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், எம்.பி. மரணமடைந்ததாக கூறப்பட்ட தகவலை மறுத்துள்ள பெங்களூரு மணிப்பால் மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாக கூறியிருப்பதால், பெருங்குழப்பம் நீடிக்கிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments