சர்வதேச ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல் வெளியீடு: இந்திய நகரங்கள் பின்னடைவு
சர்வதேச அளவில் ஸ்மார்ட் நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் 4 இந்திய நகரங்கள் பின்னடைவை சந்தித்துள்ளன.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தொழில்நுட்பம் எந்த அளவுக்கு பயனளித்துள்ளது என்பதை கருப்பொருளாக கொண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தி இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த ஆண்டு 67வது இடத்தில் இருந்த ஹைதராபாத் தற்போது 85 வது இடத்தில் உள்ளது. 68வது இடத்தில் இருந்த டெல்லி 86வது இடத்திலும் 78வது இடத்தில் இருந்த மும்பை தற்போது 93வது இடத்திலும் இருக்கின்றன.
பெங்களூரு நகரம் 95வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி 2வது இடத்திலும், சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரம் 3வது இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments