புகழுக்கு களங்கம்- நீதிமன்றத்தை நாடிய நடிகை ரகுல் பிரீத்சிங்

0 2388
புகழுக்கு களங்கம்- நீதிமன்றத்தை நாடிய நடிகை ரகுல் பிரீத்சிங்

போதை மருந்து விவகாரம் தொடர்பாக முன்னணி நடிகை ரகுல் பிரீத்சிங் தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்க பிரஸ் கவுன்சிலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் கைதான அவரது காதலி ரியா சக்ரபோர்த்தியின் வாக்குமூலம் என்ற பெயரில் ரகுல் பிரீத் சிங்குக்கு போதை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது.

ஆனால், விசாரணையில் ரியா,யாருடைய பெயரையும் வெளியிடவில்லை என போதைப் பொருள் தடுப்பு பிரிவு, திட்டவட்டமாக விளக்கம் அளித்து விட்டது.

தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட மீடியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நடிகை ரகுல் பிரீத்சிங், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார்.

வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி Navin Chawla , விளக்கம் அளிக்க, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், பிரசார் பாரதி மற்றும் பிரஸ் கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments