நடிகர் சங்கத் தேர்தல் வாக்குகளை எண்ணுவதா? மறு தேர்தல் நடத்துவதா?

0 1497
நடிகர் சங்கத் தேர்தல் வாக்குகளை எண்ணுவதா? மறு தேர்தல் நடத்துவதா?

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதா அல்லது மறு தேர்தல் நடத்துவதா என்பது குறித்துப் பதிலளிக்க நடிகர் விஷால் மற்றும் எதிர்த் தரப்பினருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தொடுத்த வழக்கில் தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்தார். இதை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டப் போராட்டம் மூலம் இரு தரப்பினரும் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என விஷால் தரப்பு கூறியதற்கு ஏழுமலை தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதையடுத்து விசாரணையை வரும் 24ஆம் தேதிக்குத் தள்ளி வைத்த நீதிபதிகள் வாக்கு எண்ணிக்கையா? மறு தேர்தலா என்பது குறித்து இரு தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments