தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45,222 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 222 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 542 குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெற்றோருடன் அனுமதிக்கப்பட்ட 30 குழந்தைகளும் குணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments