கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1086
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன் வழங்கி, அம் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட இளம் பெண் ஸ்வப்னாவின் கூட்டாளிகள் முகமது அன்வர், ஹம்சத் அப்துல் சலாம், ஜிப்சால் ஆகிய 3 பேர், கடந்த மாதம் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

ஜாமீன் கோரி, இவர் கள் தாக்கல் செய்த மனு, கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் அன்வர், அப்துல், ஜிப்சால் ஆகிய மூவருக்கும் ஜாமீன் வழங்கி, உத்தரவிட்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவில் உள்ள தூதரக முகவரிக்கு அனுப்பிய 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடத்தல் விவகாரம் வெளிச் சத்திற்கு வந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments