குடிநீரில் விஷம் கலக்கப்பட்டது அம்பலம் - உயிர்பிழைத்தார் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்...

0 5662
அலெக்சே நவால்னி

ஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சே நவால்னி (Alexei Navalny) அருந்திய தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டிருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் விமானப் பயணம் மேற்கொண்ட போது திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டார் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சே நவால்னி. உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய அவர் கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து அங்கிருந்து ஜெர்மனிக்கு அவசரகால விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

நவால்னியின் உடல் நிலையைப் பரிசோதனை செய்த ஜெர்மனி அரசு, நோவிசோக் எனப்படும் நச்சு ரசயாணம் அவரது உடலில் கலந்துள்ளதாக அறிவித்தது. இது ரஷ்ய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் உத்தரவின் பேரிலேயே அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்று நவால்னியின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்தது.

இந்த நிலையில், விமானம் நிலையம் வரும் முன், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையை அவரது உதவியாளர்கள் சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்த தண்னீர் பாட்டிலில், நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய விஷம் கலக்கப்பட்டிருந்ததை அவர்கள் உறுதி செய்தனர். தற்போது ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வரும் நவால்னி இத்தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments