தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் அறிக்கை

0 3621

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்பகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் அஜித்குமார் சார்பில் அவரது வழக்கறிஞர் எம்.எஸ்.பரத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மை காலமாக தனிநபர்கள் சிலர் நடிகர் அஜித்தின் பெயரை தவறாக பயன்படுத்தி முன்னிலைப்படுத்தும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல வருடங்களாக நடிகர் அஜித்துடன் பணியாற்றி வரும் மேலாளரான சுரேஷ் சந்திரா என்பவர் மட்டுமே அஜித்தின் அனுமதி பெற்ற பிரதிநிதி என்றும், சமூக மற்றும் தொழில் ரீதியான விஷயங்களுக்கு சுரேஷ் சந்திராவை தவிர்த்து வேறு யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் பெயரை குறிப்பிட்டு எந்த ஒரு நிறுவனமோ, தனிநபரோ அணுகினால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments