ஓடும் பேருந்தில் உடைந்து தொங்கிய கதவு... வெளிமாநிலம் செல்லும் பேருந்தின் நிலையே இப்படி!
உளுந்தூர்பேட்டையில் பெங்களூரு சென்று கொண்டிருந்த ஓடும் பேருந்தில் இருந்து கதவு கழன்று தொங்கியதால் கதவு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உளுந்தூர் பேட்டையில் இருந்து இன்று அரசுப் பேருந்து ஒன்று பெங்களூருவுக்கு புறப்பட்டது . பேருந்தில் பயணிகள் ஏராளமானோர் இருந்தனர். பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்கான ஓட்டுனர் திடீர் பிரேக் போட, பேருந்தின் முன் பகுதியில் இருந்த கதவு திடீரென கழன்று தொங்கியது . இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினர்.உடனடியாக , ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பிறகு, நடத்துனர் இறங்கி வந்து கதவை உடைத்து எடுக்க முயற்சி செய்தார் . சுமார் 3 நிமிடங்கள் வரை போராடியும் பலன் இல்லை.
பிறகு, பாதி அடைத்தும் அடைக்காத நிலையில் பேருந்து பயணித்து உளுந்தூர்பேட்டை பணிமணைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பழுது பார்த்த பிறகு, மீண்டும் புறப்பட்டது. பொதுவாக, வெளி மாநிலங்களுக்கு நல்ல நிலையில் இருக்கும் பேருந்துகளையே இயக்குவார்கள். ஏனென்றால், இந்த பேருந்துகள்தான் அந்த மாநிலங்களில் நம் அடையாளமாக பார்க்கப்படும். இதனால், நல்ல புத்தம் புதிய பேருந்துகள்தான் முன்பெல்லாம் வெளிமாநில ரூட்டுகளுக்கு இயக்கப்பட்டன. இப்போதோ, கயலான் கடைக்கு போட வேண்டிய பேருந்துகளை பெங்களுரு போன்ற வெளி மாநில நகரங்களுக்கு அனுப்பி தமிழகத்தின் மானத்தை அதிகாரிகள் வாங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Comments