இந்தியா - சீனா இடையே பதற்றம் : ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை, சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ்க்கு விற்பதில் இழுபறி
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவி வரும் பதற்றம் காரணமாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், தனது மகராஷ்டிரா ஆலையை சீனாவின் கிரேட் வால் மோட்டருக்கு விற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்திய அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டாஸ், ஏற்றுமதிக்கான வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்து வருகிறது.
மேலும், இந்தியாவில் இருந்து வெளியேறும்போது ஏற்படும் கடன்களை அடைப்பதற்கு கிரேட் வால் மோட்டருக்கு ஆலையை ஆயிரத்து 800 கோடி முதல் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரையிலான மதிப்பில் விற்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவுடனான மோதல் போக்கால் அந்நாட்டு நிறுவனங்கள் தொடர்பான ஒப்பந்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிடப்படாத செலவுகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments