தங்கக் கடத்தல் தொடர்பான என்ஐஏ விசாரணைக்கு அமைச்சர் கே.டி.ஜலீல் 2வது முறையாக ஆஜர்
தங்கக் கடத்தல் தொடர்பான என்ஐஏ விசாரணைக்கு, எதிர்க்கட்சியினர் போராட்டங்களுக்கு மத்தியில் கேரள உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் ஆஜரானார்.
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்வப்ன சுரேஷ்டன் தொலைபேசியில் பலமுறை பேசியதாக வெளியான தகவல்கள் குறித்து அமைச்சர் ஜலீலிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து ஜலீல் விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் ஆஜரானார். இதனிடையே, ஜலீல் பதவி விலகக் கோரி, தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்திய பாஜகவினரை, போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர்.
Comments