அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்குத் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை

0 1960
அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பாசனப் பகுதிகளுக்கு வரும் 20ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பாசனப் பகுதிகளுக்கு வரும் 20ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளை ஏற்று அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக வரும் 20ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதிய பாசனப் பகுதிகளில் பாசனத்துக்காக அமராவதி பிரதானக் கால்வாய் வழியாகத் தண்ணீர் திறந்துவிடவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் இரு மாவட்டங்களிலும் 51 ஆயிரத்து 803 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments