பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

0 5280
பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் எழுபதாவது பிறந்த நாளையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டுத் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நேபாளப் பிரதமர் சர்மா ஒளி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பின்லாந்து பிரதமர் சன்னா மரின் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமரின் பிறந்த நாளையொட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments