போதையில் காரை ஓட்டிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்... மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

0 1699
போதையில் காரை ஓட்டிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்... மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

சென்னையில் போதையில் காரை ஓட்டிய போக்குவரத்து உதவி ஆய்வாளரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வியாசர்பாடி போக்குவரத்து உதவி ஆய்வாளரான விநாயக மூர்த்தி நேற்றிரவு தனது காரில் எருக்கஞ்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

கார் ஒலிப்பானை தொடர்ந்து ஒலிக்கவிட்டு, மற்ற வாகன ஓட்டிகளுக்கு அவர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிலர் காரை ஓரம்கட்டி விநாயகமூர்த்தியை கீழே இறக்கியபோதுதான் அவர் போதையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரை சூழ்ந்துகொண்டு கேள்விகளால் துளைத்து எடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விநாயக மூர்த்தியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இரு தினங்களுக்கு முன் மனைவி இறந்துவிட்டதாகவும் அந்த துக்கத்தில் தாம் குடித்ததாகவும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments