முழு கட்டணம் வசூலித்த 14 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - அமைச்சர் செங்கோட்டையன்

0 2107

முழு கட்டணம் வசூலித்த 14 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் பிறந்த நாளை ஒட்டி, ஈரோட்டில் அமைந்துள்ள நினைவகத்தில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பெற்றோர், மாணவர்களின் மனநிலை மற்றும் கொரோனா சூழலை பொறுத்தே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெளிவுபடுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments