காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் தீவிரவாதச் செயல்கள் குறைந்துள்ளன - உள்துறை அமைச்சகம்
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு தீவிரவாதச் செயல்கள் 54 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் பேசும்போது, ஜம்மு-காஷ்மீரில் 2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 9 வரை 211 பயங்கரவாத தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
2019 ஆகஸ்ட் 5, முதல் 2020 செப்டம்பர் 9, வரையிலான காலகட்டத்தில் நாட்டின் உள்நாட்டுப் பகுதியில் பெரிய பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, பாதுகாப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட்டது மற்றும் தேசவிரோத சக்திகளுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக அமல்படுத்தியதால் தீவிரவாதச் செயல்கள் 54 விழுக்காடு வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments