இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை: விரைவில் சவூதி அரேபியாவும் இணையும் - அதிபர் டிரம்ப்
இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்துக் கொண்ட அரபு நாடுகளின் வரிசையில் விரைவில் சவூதி அரேபியாவும் இணையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பஹ்ரைன்-ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையடுத்து இஸ்ரேலுடன் சமாதானம் செய்த அரபு நாடுகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க சமாதான ஒப்பந்தத்தையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ஏழாவது நாடாக உரிய நேரத்தில் சவூதி அரேபியாவும் இஸ்ரேல் சமாதான உடன்படிக்கையில் இணையும் என்று தெரிவித்துள்ளார்.
Comments