எல்லையில் மனோதத்துவ ரீதியான உத்தியை கையாளும் சீனப்படையினர்
லடாக் எல்லையில் இந்தியப் படைகளுடன் நேருக்கு நேர் நிறுத்தப்பட்டுள்ள சீனப் படையினர் அங்கு ஒலி பெருக்கிகளைப் பொருத்தி இந்திய ராணுவத்தில் அதிகளவில் உள்ள சீக்கியர்களை மகிழ்விக்க பஞ்சாபிய பாடல்களை ஒலிபரப்பி வருகிறது.
மேலும் இந்தியில் எச்சரிக்கையையும் சீன ராணுவம் ஒலிபரப்பி வருகிறது. இது எதிரியை வெல்வதற்கு ஒரு பழைய சீன உத்தி என்று கூறப்படுகிறது. மனரீதியாக எதிரியை தன் வசப்படுத்துவது என்று சுன் சூ என்ற சீன ஆசிரியர் தனது “Art of War” புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1962ம் ஆண்டு இந்தியாவுடன் போர் புரிந்த போதும் சீனா இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியா தனது எல்லையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. சிவப்புக் கோட்டை தாண்டி வந்தால் பலத்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments