நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் - ரிசர்வ் வங்கி
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும் என்று அதன் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், இன்னும் இயல்பு நிலைக்குப் பொருளாதாரம் திரும்பவில்லை என்று கூறிய அவர், வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை எடுத்து போராட ரிசர்வ் வங்கி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஆயினும் பொருளாதாரம் படிப்படியாக மீளும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்
Comments