மனித உயிரணுக்களை அழிக்க கொரோனா வைரஸ் பயன்படுத்தும் கார்போ ஹைட்ரேட் மூலக்கூறு கண்டுபிடிப்பு
மனித உயிரணுக்களை அழிக்க கொரோனா வைரஸ் பயன்படுத்தும் கார்போ ஹைட்ரேட் மூலக்கூறை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனித குலத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் உலக அளவில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், செல் என்ற பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கையில், ஹெபரான் சல்பேட்(heparan sulphate) எனப்படும் கார்போஹைட்ரேட் மூலமாகவே, நுரையீரலின் மேற்பரப்பில் கதவை போன்று அமைந்துள்ள ACE2 எனும் மூலக்கூறை சிதைத்து கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments