தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை
தெலங்கானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் சாலைகளிலேயே மழைநீர் வெள்ளம் என பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஹைதராபாத்தில் தொலி சவுக்கி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த, ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போன்ற வாகனங்கள் மழை நீரில் மூழ்கின.
குகட்பல்லி பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
இதேபோல், கிருஷ்ணாநகர் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Comments