அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஜோ பைடனை ஆதரிப்பதாக ஆய்வில் தகவல்

0 2045
அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை ஆதரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை ஆதரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, இந்த தேர்தலில் பல பகுதிகளில், வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய வாக்காளர்களாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளனர்.

அவர்களது ஆதரவு தொடர்பான ஆய்வில், ஜோ பைடனுக்கு 66% அளவிலும், ட்ரம்பிற்கு வெறும் 28% அளவிற்கும் மட்டுமே அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆதரவளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments