10 போலீஸ் கைதிகள் மீதும் குற்றப்பத்திரிக்கை எப்போது ? ஜாமீன் பெற திட்டம்

0 3616
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் 85 நாட்கள் கடந்தும் இதுவரை சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத நிலையில், சிறையில் இருக்கும் 9 போலீஸ் கைதிகளும் ஜாமீனில் வெளியே வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் 85 நாட்கள் கடந்தும் இதுவரை சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத நிலையில், சிறையில் இருக்கும் 9 போலீஸ் கைதிகளும் ஜாமீனில் வெளியே வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக சாத்தான்குளம் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் ரகுகணேஷ், உள்ளிட்ட 10 போலீசார் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பின், இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்திவந்த சிபிஐ அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். மதுரை சிறையில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை உடல் நலக்குறைவால் பலியானார்.

கொரோனா தாக்கத்தால் இந்த கொலை வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்பட்டது. வழக்குப் பதிவு செய்து 86 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை இந்த இரு கொலை வழக்குகளிலும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் தற்போது சிறையில் உள்ள 9 போலீஸ் கைதிகளுக்கும் ஜாமீன் பெற்று வெளியில் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது.

எந்த ஒரு குற்றவழக்கிலும் 90 நட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும். அப்படி தாக்கல் செய்யப்படவில்லையெனில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் பெற்று வெளியில் வந்துவிட சட்டத்தில் இடமுள்ளது. இதனை பயன்படுத்தி, ஜாமீனில் வெளிவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீஸ் கைதிகளும் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிபிஐ துரிதமாக இன்னும் ஒரு சில நாட்களில் இந்த இரு கொலை வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கையை தாக்கல் செய்தால் மட்டுமே அவர்களின் ஜாமீன் பெறும் திட்டத்தை முறியடிக்க முடியும் என்று கூறும் ஜெயராஜ்- பென்னிக்ஸ் உறவினர்கள், விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி சிபிஐ தலைமை அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments