தென் மாநிலங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றனர் - மத்திய அரசு

0 1146

தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 122 பேரை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 17 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தவர்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி, சைபர் வெளியைப் பயன்படுத்தித்தான் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் ஆள் சேர்ப்பதாக கூறினார். எனவே சைபர் கிரைம் போலீசார் சமூக ஊடகங்களை உன்னிப்பாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments