நாடாளுமன்றத்தில் ஜெயாபச்சன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு... அமிதாப்பச்சன், ஜெயாபச்சன் வசிக்கும் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

0 6916
நாடாளுமன்றத்தில் ஜெயாபச்சன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு... அமிதாப்பச்சன், ஜெயாபச்சன் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

நாடாளுமன்றத்தில் ஜெயாபச்சனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக மும்பையில் அவரது வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சி எம்பியாக இருக்கும் ஜெயாபச்சன், நேற்று மாநிலங்களவையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப் பொருள் விவகாரத்தில், ஒட்டுமொத்தமாக பாலிவுட் திரையுலகத்தை குற்றம்சாட்டக்கூடாது என்று பேசினார்.

அவரது இந்த கருத்துக்கு பாலிவுட் திரையுலகின் பலர் சமூக ஊடகங்களில் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த போதிலும், சிலர் கடுமையாக சாடியிருந்தனர். இதன் காரணமாக மும்பையின் ஜூகு பகுதியில் அமிதாப்பச்சன் மற்றும் ஜெயாபச்சன் வசிக்கும் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments