அரியர் தேர்வில் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பில் மாணவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - அமைச்சர் கே.பி.அன்பழகன்

0 5006
அரியர் தேர்வில் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பில் மாணவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - கே.பி.அன்பழகன்

அரியர் குறித்து மாணவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரிப்பது தொடர்பான மசோதாவை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய அமைச்சர், அரியர் ஆல் பாஸ் விவகாரத்தில், மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசிற்கு இல்லை என உறுதிபட கூறினார்.

அரியர் ஆல் பாஸ்க்கு எதிராக AICTE சேர்மன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு தனியாக E- mail அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக E-mailக்கு அனுப்பவில்லை என்றும், அரசுக்கும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை என்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments