பாபர் மசூதி வழக்கில் வரும் 30 ஆம் தேதி தீர்ப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி எஸ்கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி நீதிமன்றத்தில் ஆஜாராவார்கள் என கூறப்படுகிறது.
1992 காலகட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்களாக இருந்த இந்த 3 பேரும், பாபர் மசூதியை இடிக்க சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற புகாரில் வழக்கு விசாரிக்கப்பட்டது.
Comments