சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது

0 1567
சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் கடந்த மாதம் கொள்ளை கும்பல் ஒன்று சுரேஷ் ரெய்னாவின் மாமா உள்ளிட்ட 2 உறவினர்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றது.

இந்நிலையில் பதான்கோட் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்துவிட்டதாக அமரீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments