தேசியக் கல்விக் கொள்கை பற்றிப் பேசச் சிறப்புக் கூட்டம் கூட்டாததைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
தேசியக் கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டாததைக் கண்டித்துச் சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியக் கல்விக் கொள்கை, மாநிலக் கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும், சமஸ்கிருதத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் பிற மொழிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், குலக்கல்வித் திட்டத்தின் மறு வடிவமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அளிக்கும் அறிக்கையைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Comments