ஜப்பான் பிரதமராக யோஷிஹிடே சுகா முறைப்படி தேர்வு...
ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிதே சுகா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரு தினங்களுக்கு முன்னர் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தேர்வான அவரை, ஜப்பான் நாடாளுமன்ற கீழவை உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் பிரதமராக தேர்வு செய்தனர்.
இதை அடுத்து அவர் பிரதமர் அலுவலகத்தில் விரைவில் அதிகாரப்பூர்வமாக பதவியை ஏற்றுக்கொள்வதுடன், தமது அமைச்சரவையையும் அறிவிக்க உள்ளார்.
71 வயதான யோஷிஹிதே சுகா பதவி விலகிய பிரதமர் ஷின்ஷோ அபேயின் வலதுகரமாக கருதப்படுகிறார். அபேயின் தாராளமான நிதிக் கொள்கையான Abenomics-ஐ தாம் தொடர்ந்து பின்பற்றப்போவதாவும் அவர் அறிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் அபே பதவி விலகிய நிலையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானில் பிரதமர் பதவிக்கு புதிய நபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Comments