புதிதாக கட்டப்படவுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பகுதியில் அசோக சின்னம்
புதிதாக கட்டப்படவுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பகுதியில் அசோக சின்னம் பொருத்தப்படும் என செய்தி வெளியாகி உள்ளது.
டெல்லியில் சவுத் பிளாக்கிற்கு அருகே சென்டிரல் விஸ்டா என அழைக்கப்படும் பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம், அரசு துறைகளுக்கான 8 கட்டிடங்கள் மற்றும் அலுவலர்களுக்கான குடியிருப்புகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பகுதியில் அசோக சின்னம் நிறுவப்பட உள்ளது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுற்றதும் புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப்பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments