அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு எனத் தகவல்
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சீர்மிகு பல்கலைக்கழகம் என்னும் தகுதியை மத்திய அரசு கொடுத்தால், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால், இட ஒதுக்கீட்டைக் காக்க அதை இரண்டாகப் பிரிக்கும் முடிவை உயர்கல்வித்துறை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இரண்டாகப் பிரித்து உருவாக்கப்படும் அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் உள்ள ஐந்நூற்றுக்கு மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகளை நிர்வகிக்கும் என்றும், அதனால் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
Comments