சட்டப்பேரவையில் இன்று துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்

0 1166

தமிழகச் சட்டப் பேரவையில் இன்று துணை நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். 

கொரோனா சூழலில் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. மூன்றாம் நாளான இன்று துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் துணை நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் தாக்கல் செய்கிறார்.

இதில் கடந்த ஆறு மாதங்களில் பேரவையின் ஒப்புதலைப் பெறாமல் செய்யப்பட்ட செலவுகளைக் குறிப்பிட்டு அதற்கு அவையின் ஒப்புதலை ஓபிஎஸ் கோரவுள்ளார்.

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏழாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அரசு அந்தத் தொகைக்குப் பேரவையில் ஒப்புதலைப் பெறும். இதேபோல் புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டங்களுக்குப் பதில் அவையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments