நீட் மற்றும் ஜேஇஇ தேர்வெழுதா மாணவர்களுக்கு மறுதேர்வு?

0 1091
நீட், ஜேஇஇ தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜேஇஇ தேர்வு கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த 13ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

இதில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏராளமான மாணவர்கள் தேர்வைத் தவறவிட்டனர். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை எழுதமுடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

எனவே தேர்வு எழுதமுடியாமல் போன மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த தேதி ஒதுக்க உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments