போதைப்பொருள் சப்ளை ; 13 நாடுகளில் சொத்து குவிப்பு ... நடிகர் விரேன் கண்ணாவின் அதிர வைக்கும் பின்னணி

0 28996

நடிகர் நடிகைகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து கோடி கோடியாக சம்பாதித்த நடிகர் விரேன் கண்ணா 13 நாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

கன்னட திரையுலகை போதைப் பொருள் விவகாரத்தால் கலங்கி போய் கிடக்கிறது. போதைப் பொருள் விவகாரத்தில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி நடிகர் விரேன் கண்ணா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், நடிகர் விரேன் கண்ணாவிடத்தில் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. நடிகர் , நடிகைகளுக்கு ஹை பை விருந்து ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் விரேன் கண்ணாவின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது. அப்போத, போதைப் பொருள்களை நடிகர் நடிகைகளுக்கு சப்ளை செய்து பல கோடிகளை அவர் சம்பாதித்துள்ளார். அப்படி குவிந்த பணத்தை இந்தியா மட்டுமின்றி 13 நாடுகளில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளார் .

விரேன் கண்ணாவுக்கு 250 க்கும் அதிகமான சொத்துகள் உள்ளது . இது தவிர டெல்லி , மும்பை , பெங்களூருவில் பிளாட்டுகளும் உள்ளன . மகாராஷ்டிரா புனேவில் வீரேன் கண்ணா பெயரில் ஒரு பண்ணை வீடு உள்ளது . இது தவிர, 3 ஈவெண்ட் கம்பெனிகள் உள்ளது . 5 சொகுசு கார்கள் வாங்கியுள்ளார் . இவை அனைத்தும் போதை பொருள் விற்று சம்பாதித்தாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. விரேன் கண்ணாவின் போதைப் பொருள் பிசினஸில் நடிகை , நடிகை கள் , அரசியல் பிரமுகர்கள் , தொழிலதிபர்களின் பினாமி பணம் முதலீடு செய் திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.image

இதற்கிடையே போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகைக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கன்னட திரைஉலகில் முன்னணி நடிகையான ஷர்மிளா மந்த்ரே சென்ற கார் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பெங்களூரு வசந்த்நகர் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த நடிகை ஷர்மிளா மந்த்ரே உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து ஹைகிரவுண்ட் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது., நடிகை ஷர்மிளா மந்த்ரே குடிபோதையில் இருந்ததாகவும், காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகவும் ஷர்மிளா மந்த்ரே மீது குற்றச்சாட்டு எழுந்தது. போதைப்பொருள் விவகாரத்தில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வாவும், நடிகை ஷர்மிளா மந்த்ரேவும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் கூடுதல் தகவல். கார் விபத்தில் சிக்கிய தினத்தில் ஆதித்யா ஆல்வா நடத்திய விருந்து நிகழ்ச்சியில் ஷர்மிளா மந்த்ரே கலந்து கொண்டு விட்டு நண்பருடன் வீடு திரும்பிய போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையின் போது வயிற்றுவலிக்காக மெடிக்கல் சென்று மருந்து வாங்கி வந்ததாகவும் காரை தன் டிரைவர் டான் தாமஸ் ஓட்டினார் என்றும் ஷர்மிளா மந்த்ரே கூறி இருந்தார். ஆனால் டிரைவர் காரை ஓட்டவில்லை என்றும், அவர் பொய் சாட்சி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே ஷர்மிளாவுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவரிடமும் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர். நடிகை ஷர்மிளா மந்த்ரே தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments