திருச்சி நகைக்கடையில் வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் 8 மணி நேரம் சோதனை, ஆவணங்கள் பறிமுதல்..!
திருச்சியில் உள்ள மங்கள் &மங்கள் நகைக் கடையில் சுங்கம் மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் 15பேர் சோதனையில் ஈடுபட்டனர். கேரளா தங்க கடத்தல் விவகாரத்தை அடிப்படையாக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கேரள தங்க கடத்தலில் ஈடுபட்ட கும்பலுக்கும் இந்த கடைக்கும் தொடர்பு உள்ளதா? அவர்களிடமிருந்து நகை வாங்கி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அந்த சோதனை இரவு 9 மணி அளவில் நிறைவடைந்தது.சோதனைக்கு பின்பு அந்த கடையிலிருந்து சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
Comments