கொரோனா தொற்றால் இதுவரை 155 சுகாதார பணியாளர்கள் உயிரிழப்பு- மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் தகவல்

0 1401
கொரோனா தொற்றால் இதுவரை 155 சுகாதார பணியாளர்கள் உயிரிழப்பு- மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினி சவுபே தகவல்

கொரோனா பாதிப்பால் இதுவரை 155 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினி சவுபே தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த 11ந்தேதி வரை கொரோனா தொற்றால் 64 மருத்துவர்கள் உள்பட 155 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு காப்பீடு திட்டத்தின்கீழ் சுகாதாரப் பணியாளர்களின் உயிரிழப்பிற்கு, நிவாரண உதவி வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும் அஷ்வினி சவுபே தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments