ரூ.2 கோடி மோதிரம் கொள்ளை குற்றவாளிகள் ஆந்திராவில் கைது?

0 2805
ரூ.2 கோடி மோதிரம் கொள்ளை குற்றவாளிகள் ஆந்திராவில் கைது?

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆசாரம்குப்பத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரிடம் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் சித்தூர் ஆகிய இடங்களுக்கு இரு குழுக்களாக சென்ற தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது திருப்பதி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட காரையும், அதிலிருந்த குற்றவாளிகளையும் மடக்கி பிடித்து கைது செய்து தனிப்படையினர் தமிழகம் அழைத்து வருவதாக கூறப்படுகிறது.

அதுபோல் சித்தூர் சென்ற மற்றொரு தனிப்படையினர் அங்கு பதுங்கி இருந்த மேலும் சில குற்றவாளிகளை பிடித்துக் கொண்டு அவர்களிடமிருந்த வைர மோதிரங்களை கைப்பற்றி தமிழகம் விரைவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இண்டிகா கார் குறித்த போலீசாரின் விசாரணையில் அந்த கார் திருமண மண்டப உரிமையாளர் காளிதாசுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. மேலும் இவரது மகன் பரந்தாமனுக்கும் சித்தூரில் இருக்கும் மணிகண்டனுக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து தனிப்படையினர் ஆந்திர மாநிலம் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments